Translate

Translate

எனது வலைப்பதிவு பட்டியல்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

சனி, 4 ஜூலை, 2009

தவணை முறை வட்டி வீட்டுக் கடன்-03



நிலையில்லாத வட்டி கணக்கீடு -நாமே அறியலாம்.
இணைய தளத்திலும் அறிய முடியாத நிலையில்லாத வட்டிக்கான கணக்கீடு எந்த வங்கி கால்குலேடேர் தளத்திலும் இது போல் வசதி செய்து தரப்படவில்லை நிலையான வட்டிக்கு மட்டும் தான் கம்ப்யூட்டர் வழியாக கணக்கீடு பார்க்க வங்கிகளும் மற்ற நிதி நிறுவனங்களும் கால்குலேடேர் கணிப்பு முறை உள்ளன மாறுபடும் வட்டி காண சாதாரண கால்குலேடர் மூலமாக கணக்கிடும் மேற்கண்ட அட்டவணையை பார்க்கவும்
தவணை மாதம் 6 அதாவது 06.12.2009 வட்டி விகிதம் 12 இல இருந்து 10 ஆக குறையுமானால் அசல் தொகை ரூபாய் 59779 க்கு 10 சதவிகித வட்டி ரூபாய் 498 தவணை தொகையான ரூபாய் 8885 லிருந்து கழித்து மீதமுள்ள 8387 கழித்து 7 வது மாத ஆரம்ப இருப்பாக வைக்கவேண்டும் இதுபோலவே தவணை மாதம் 10 அதாவது 06.04.2010 வட்டி விகிதம் 12 லிருந்து 14 ஆக அதிகமானால் அசல் தொகை ரூபாய் 26130 க்கு 14 சத விகித வட்டி ரூபாய் 305 தவணை தொகையான 8885 லிருந்து கழித்து மீதமுள்ள 8580 அசல் தொகையில் கழித்து 11 வது மாத ஆரம்ப இருப்பாக வைக்கவேண்டும் இவ்வாறே எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் எவ்வளவு மாதங்கள் வேண்டுமானாலும் சாதரண கால்குலேடர் மூலமாக கணக்கிடலாம்.
சயிண்டிபிக் கால்குலேடர் வைத்திருப்பவர்கள் கீழ்கண்ட முறையில் கணக்கிடலாம்
மாத வட்டி ரூபாய் 1000 த்தை 1+0.1 power of (The product of a number multiplied by itself) என்ற பட்டனை தட்டிய பிறகு 12 என்ற எண்ணை தட்டி = செய்தால் 1.268250 என்ற விடை வரும் 1000x1.268250/0.268250 = 8,885 என்று தவணை தொகையை அறியலாம் இந்த கணக்கீடானது 12 சதவிகித வட்டியில் 12 மாதங்களில் திருப்பி செலுதுவதற்கேர்றவாறு கணக்கிடப்பட்டுள்ளது தவணை தொகையையும் தவணை மாதங்களும் மட்டும் மாற்றினாலே கோடி ரூபாய் வரை கூட கணக்கிடலாம்
சாதரண கால்குலடேர் மற்றும் சைன்டிபிக் கால்குலடேர் முதலியவற்றில் காணும் கணக்கீடுகள் தற்போதைய நடைமுறைக்கு ஒத்து வராது எனினும் பலர் இவற்றை பல இணைய தளங்களில் கேள்வியாக கேட்டும் புரியவில்லை என்று எழுதியுள்ளதால் அவர்களுக்காக எழுதியுள்ளேன் அனைவரும் தவறாமல் www.bank bazaar. Com போன்ற இணைய தளங்களை பார்த்து சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்
மற்றும் தமிழில் இதுவரை இது போன்ற கணக்கீடுகள் வரவில்லை என்பதற்காகவும் தான் வெளியிடப்பட்டுள்ளது.
சரி மேற்கண்டவாறு கணக்கு பார்க்க நமக்கு நேரமில்லை உடனடியாக கடன் கணக்கை பார்க்க நினைக்கும் நண்பர்கள் இனைய தளத்தின் மூலம் உடனே கணக்கு பார்க்கலாம்.
Google search
பகுதிக்கு சென்று Equated Monthly Installment என்று டைப் செய்தாலே கீழ்கண்ட ஆயிரக்கணக்கான தளங்கள் காணலாம் இவை அனைத்துமே இலவசம் தான் . நமது கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்து கொள்ளும் வசதியும் சில தளங்களில் உள்ளன பிரசித்தமான தளம் :Bank Bazaar Com.
equated monthly installment 57,000 results
equated monthly installment 3037,300 results
equated monthly installment formula 6,860 results
equated monthly installment calculator 9,150 results
equated monthly instalment formula 6,580 results
equated monthly installment calculation 11,900 results
equated monthly instalment calculator 6,140 results
equated monthly installments wiki 2,460 results
equated yield 407,000 results
equated definition 799,000 results
www.bankbazaar.com
இத்தளத்தில் உள்ள விசேஷம் என்னவென்றால் அட்டவணையில் உள்ள அனைத்தையும் குறைந்த பட்ச தொகையான கடன் தொகை ரூபாய் 25000 லிருந்து குறைந்த கால கடன்-6 மாதம் வட்டி விகிதம் 6% அனைத்தையும் அறியலாம். அது மட்டுமின்றி இத்தளத்தில் calculator வசதியும் மற்றும் மற்ற வங்கிகளுக்கு கடனை மாற்றிக் கொள்வதாயிருந்தால் Refinance Calculator தேடல் வசதியும் உள்ளது. மற்றும் அணைத்து வங்கிகள், நிதி நிறுவனங்கள், நிதி ஆலோசகர்கள் தளங்களையும் பார்த்து கூடுமான வரை எந்த வங்கியில் கடன் பெறலாம் என்று ஒரு தீர்மானத்திற்கு வருவதற்கு பயன் உள்ளதாக இருக்கும். வீட்டுக் கடன் பெற மட்டும் தான் சில வங்கிகள் மிகக்குறைந்த விலையில் கடன் அளிக்கின்றனர் மற்ற தவணை முறை திட்டங்கள் அதிக வட்டி உள்ளதாகவும் நடைமுறை மாறு பட்டதாகவும் இருக்கும் இதனை பின் வரும் தொடரில் காணலாம்
ஒரு வங்கியில் வாங்கிய கடன் தொகைக்கான வட்டி அதிகம் என்று தோன்றினால் குறைந்த வட்டி அளிக்கும் மற்ற வங்கிக்கு மாற்றிக்கொள்ளலாம் அதற்கு முன்பு அதற்கு தேவைப்படும் முறைகளை சிறிது தெரிந்து கொள்வது நல்லது.கடன் பெற்ற வங்கி முன்னமே கணக்கை முடிப்பதால் மீதமுள்ள முழு அசல் தொகைக்கும் குறைந்த பட்சம் 2 - 3 சதவிகிதம் வரை கணக்கிட்டு பிடித்துக்கொள்வார்கள் மாறிச்செல்லும் வங்கிகளில் பரிசோதனை கட்டணம் சேவை கட்டணம் பொறியாளர்-வக்கீல் என்று பல விகிதங்களில் செலுத்தி கடன் பெற்ற பிறகு அந்த வங்கியும் வட்டி உயர்த்தினால் என்ன ஆவது? ஆதலால் லாபமா அல்லது நஷ்டமா என்று கணக்கீடு செய்து வாங்குவது நல்லது.பெரும்பாலும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வட்டி விகிதம் குறைவாகவும் மற்ற தனியார் வங்கிகள் வட்டி விகிதம் சற்று அதிகமாகவும் இருக்கலாம் . ஏற்கனவே நிலுவையிலுள்ள கடன் தவிர மேலும் கடன் தேவையென்றாலும் அந்த வங்கியிலேயே கடன் பெறலாம் வட்டி விகிதம் நிலையான வட்டி - மாறும் வட்டி விகிதம் வங்கிகளில் அறிந்து கடன் பெறலாம் இவ்விரண்டு வட்டிகளுக்கும் பெரும்பாலும் தோற்றத்தில் தான் வித்தியாசம் இருப்பது போல் தோன்றுமே தவிர கால முடிவில் வட்டி விகிதம் ஒரே மாதிரி தான் இருக்கும் ஏனெனில் மாறும் வட்டி விகிதத்திற்கேற்ப நம்மிடம் சேவைக் கட்டணம் பெற்று தான் சில வங்கிகள் திருத்தி அமைக்கிறார்கள் இவ்வாறு முன்னரே செலுத்தும் தொகையை கணக்கிட்டால் வட்டி அதிக வித்தியாசம் தெரிவதில்லை
வாடகை வீட்டில் செலுத்தியுள்ள அட்வான்ஸ் துகை மற்றும் கை இருப்பிலுள்ள துகையை முன் பணமாக செலுத்தி கடன் பெறலாம் வீட்டு உரிமையாளராகலாம் ஒழுங்காக திருப்பி செலுத்துவதற்கான தேவையான ஆவணங்களை சமர்ப்பிதாலே கடன் பெற இயலும் கடன் வாங்கி வீடு அல்லது பிளாட் உரிமை பெற்றபிறகு 5 வருடங்கள் கழித்து பார்த்தால் நாம் செலுத்தும் தவணை தொகையானது வாடகை வீட்டிற்கு செலுத்தும் வாடகைக்கு சமமாக இருப்பதை உணரலாம்.வீடு கட்டும் கடனை முதன்மைக்கடனாகவும் குறைந்த வட்டியிலும் அளித்து வாடிக்கையாளரை தக்க வைத்துக்கொள்வதன் காரணம் பெரும்பாலும் தவணையை குறித்த காலத்தில் செலுத்தி விடுவார்கள் என்பதும் வீட்டின் பதிவுப்பதிரம் வங்கியில் இருப்பதால் தற்போதுள்ள சட்டப்படி தவணை தவறிய கடன் தொகைக்கு ஏலத்தில் விற்று பணத்தை வரவு வைத்துக்கொள்ளலாம் என்ற நிலைப்பாடு ஒரு காரணம்
வீட்டின் விலை உயர்வை கணக்கிட்டால் ? மதிப்பின் உயர்வு தரும் ஆனந்தம் எல்லை இல்லை சேமிப்புக்கு சேமிப்பு -வருமான வரி விலக்கினால் ஆதாயம் -பிரதி மாதம் தவணை தொகை செலுத்துவதனால் நிறைவான சேமிப்பு. இந்திய ரிசர்வ் வங்கி வழி காட்டுதலில் வீட்டு கடனை முதன்மை கடனாக பாவித்து வங்கிகளும் தாரளமாக போட்டி போட்டுக்கொண்டு குறைந்த வட்டியில் கடன் அளிப்பதால் வாங்குங்க வாங்குங்க இருங்க இருங்க.......ஒரு தகவல் அமெரிக்காவில் சொந்த வீடு வாங்க ஆசை இல்லாதவர்களை கூட வங்கிகளின் ஆலோசகர்களின் தூண்டுதலால் கடன் பெற்று பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர் ஆனால் இது போன்ற நிலை நம் நாட்டில் இல்லாதது மகிழ்ச்சிதான் அமெரிக்க வங்கியில் ஏற்பட்ட அனுபவங்களையும் நஷ்டங்களையும் கருத்தில் கொண்டு வீட்டின் மதிப்பு குறையாத அளவிற்கு மதிப்பீடு செய்து வீடு வாங்கலாம் கடன் பெறலாம் கடன் கொடுத்தவர் தான் தற்போது உண்மையிலேயே மனமுருகி பிரார்த்தனை செய்து நாம் ஒழுங்காக கட்டி முடிக்க துணை புரிகிறார்கள் பாது காப்பான கடன் வீட்டின் அடமானம் பத்திரம் வங்கி வசமுள்ளது என்பதெல்லாம் அப்புறம் தான்
தாங்கள் அறிந்து கொள்வதற்காக கடன் தொகை ரூபாய் ஒரு லட்சமும் வட்டி 12% தவணை மாதங்கள் 12 குறிப்பிடப்பட்டுள்ளது தங்கள் தேவைக்கேற்ப கடன் தொகை தவணை மாதாம் வட்டி அனைத்தும் மாற்றி கணக்கிட்டு பயன் பெறலாம், உதவி தேவைப்படின் அல்லது சந்தேகமிருப்பின் தொடர்பு கொள்ளலாம் . பயன்பாடு பற்றிய தங்களின் அறிக்கையின் மீது தான் இது போன்ற கட்டுரைகள் எழுத உபயோகமாக இருக்கும்.
அன்புடன் LIC சுந்தரமுர்த்தி நிதி நிறுவன ஆலோசகர்

கருத்துகள் இல்லை: