Translate

Translate

எனது வலைப்பதிவு பட்டியல்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 30 அக்டோபர், 2009

சிரார்த்தங்களை செய்வதால் ஏற்ப்படும் நன்மைகள்.

இந்து மதத்தை சார்ந்த ஒவ்வொருவரும் தனது வாழ்நாளில் செய்யவேண்டிய முக்கியமான கடமை, காசிக்கு சென்று கங்கா ஸ்நானம் செய்வது.அவ்வாறு செல்லும்போது காசி-பிரயாகை-கயா ஆகிய மூன்று புண்ணிய ஸ்தலங்களிலும் பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை செய்வது.

தாய் தந்தையர் மற்றும் மூதாதையருக்கு உயிருடன் இருக்கும் போது பணிவிடை செய்து சேவை செய்ய வேண்டும். அவர்கள் உலகை விட்டுப் போன பின்னர் அவர்களுக்காக சாஸ்திரம் கூறியுள்ளபடி தர்ப்பணம், சிரார்த்தம் ஆகியவற்றை தவறாமல் செய்ய வேண்டும். பித்ருக்களிடம் நாம் காட்டும் நன்றியிலும் அவர்களுக்கு செய்யும் கடமைகளிலும் சிரத்தை இருக்க வேண்டியது முக்கியம். இதனாலேயே இதனை சிராத்தம் என்று அழைக்கிறோம்.

மனித யக்ஞம்: மனிதனாகப் பிறந்த எல்லோரும் தங்களுடைய முன்னோர்கள், தெய்வம் இவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இதுவே பித்ரு கடன், தேவகாரியம் என்பவை. நம்முடன் வாழும் மக்களுக்கு நம்மால் ஆனதை செய்யவேண்டும். குறைந்தது ஒரு அதிதிக்கு உணவளிக்கவேண்டும், இது மனித யக்ஞம்.

பிரம்மயக்ஞம்: என்பது வேதம் ஓதுவதும் ஒதுவிப்பதுமே. இது மனித குல நன்மைக்காக அந்தணர்கள் மட்டும் செய்யவேண்டியது.

பூத யக்ஞம் மனிதனாக இல்லாத மிருகங்கள் கூட அன்பைத் தெரிவித்து உணவு ஊட்டுவது பூத யக்ஞம்.

ஆக மனிதனாகப்பட்டவன் மனிதயக்ஞம், பிரம்மயக்ஞம், பித்ருயக்ஞம், பூத யக்ஞம் ஆகிய கடமைகளை கட்டாயம் செய்தாக வேண்டும்.

எப்போதும் நம்மை வாழ்த்துகின்ற பித்ருக்களுக்கு திருப்தி, போஜனம் எங்கு நடந்தாலும் திருப்தி அடைகின்ற ச்வர்க்கவாசிகளான தேவர்கள், பிண்டதானத்தால் திருப்தியைப்பெற இயலாத நரகவாசிகள், பித்ருலோகம் அடைய இயலாத நிலையில் உள்ளவர், காக்கைக்குப் பிண்டம் அளிப்பதால் நாம் அறிந்திராத பித்ருக்கள் எனப்பலர் திருப்தி அடைகின்றனர். அவர்களது திருப்தியின் பலனாக சிரார்த்தம் செய்பவருக்கு நோயற்ற சந்ததி, செல்வம், வம்சவிருத்தி ஆரோகியம், ஞானம், இம்மை, மறுமையில் மேன்மை இவைகளும் கிடைக்கின்றன.

வருட சிரார்த்தம் செய்யும்போது விசுவதேவர் இலையில் அமர்ந்திருப்பவருக்கு அன்னம் பரிமாரசெய்து பகவான் ஜனார்த்தனர் ஸ்ரீ ஹரி திருப்தி அடையட்டும் என்று பித்ருதீர்த்த முறையில் தர்ப்பத்தில் விட்டு கயை சிரார்த்தம் அஷ்யவடம் என்று கயை ஷேத்ரத்தை முமமுறை கய கய கய என்று ஸ்மரிக்கிறோம் .

அன்னையும் பிதாவும் இவ்வுலகை நீத்தபின் அவர்களிடம் நாம் கொண்டுள்ள நன்றி உணர்வை வெளிப்படுதுதலே சிராத்தம். பெற்றோரை குறித்து சிரார்த்தம் செய்யும் பொது நமது முந்தைய மூன்று தலை முறைகளையும் நினைவு கூர்கிறோம் நம் முன்னோர்கள் நம் வம்சத்தில் யாரவது ஒருவராவது கயைக்கு வந்து நம்மைக் கரையேற்ற மாட்டார்களா என்று காத்திருப்பார்களாம் காரணம் கயாசுரன் பெற்ற வரம் தான்.

கயையில் பிரமணர்களை கொண்டுதான் சிரார்த்தம் செய்விக்கப்படுகிறது.


கருத்துகள் இல்லை: