Translate

Translate

எனது வலைப்பதிவு பட்டியல்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 30 அக்டோபர், 2009



பிண்டதானம்-கயா விஷ்ணு பாதம்

பின்னர் உடலை சுத்தம் செய்து கொண்ட பின்னர் மறுபடியும் பிண்டதானம் தர்ப்பணம் செய்தோம். இதில் எனது மனைவி இரண்டாவது கலச அவிசிலிருந்து 42 பிண்டங்கள் தயாரித்து கொடுக்க இந்த தடவை எனது மற்றும் எனது மனைவி வழி உறவினர்கள் அனைவரின் பெயர் கூறி பிண்டம் அளித்தோம். ஜபம், தர்ப்பணம் சங்கல்பம், சிரார்த்தம் அனைத்தும் முடிந்த பின்னர் பிரமணர்களுக்கு தானமாக 9 கச வேஷ்டி அங்கவஸ்திரம், தர்ப்பணம் செய்ய பித்தளை செம்பு, பஞச பாத்திரம், உத்திரினி, வேத புஷ்தகங்கள், பூணூல், ரவிக்கை துண்டு, குடை, விசிறி, தாம்பாளம், தட்சனை என அவருக்கு தம்பதியராக நமஸ்கரித்து தானம் அளித்தோம். அவரும் அவற்றை ஏற்றுக்கொண்டு எங்களை ஆசீர்வதித்தார்.

பின்னர் சுத்தி செய்து கொண்டு விஷ்ணு பாதம் சென்று விஷ்ணுவை ஆராதித்து நமஸ்கரித்த பின்னர் 42 பிண்டங்களையும் விஷ்ணு பாதத்தில் சமர்ப்பித்து ஆசி வேண்டினோம். விஷ்ணு பாதம் வெள்ளியினால் செய்த தொட்டியில் என் கோண வடிவில் அமைந்துள்ளது. சுவாமி தரிசனம் முடித்த பின்னர் அங்குள்ள பிரகாரத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் ஆண்கள் மட்டும் ஹோமம் வளர்த்து மறைந்த முன்னோர்கள் அனைவரின் பெயரையும் கூறி சிரார்த்தம் செய்தோம். எனது மனைவி அஷய வட்டத்தில் பிண்டம் போடுவதற்க்காக அங்குள்ள மண்டபத்தில் அமர்ந்து மூன்றாவது கலசத்திலிருந்து 64 பிண்டங்கள் தயாரித்தாள். ஹோமம முடிந்து கடவுளை நமஸ்கரித்த பின்னர் அங்குள்ள பண்டாகளுக்கு தானம் செய்தோம்.

ஆலயத்தில் கதாதரர் வடிவில் மகாவிஷ்ணுவை தரிசிக்கலாம். விஷ்ணு பாதம் தரிசித்து சபா மண்டபம் அருகில் சிவனும் லஷ்மியும் கோவில் கொண்டுள்ளார்கள். கதாதரர் நரசிம்மர் கயாஸ்வரி ஆகிய கடவுள்களும் உள்ளனர்.

கருத்துகள் இல்லை: