Translate

Translate

எனது வலைப்பதிவு பட்டியல்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 30 அக்டோபர், 2009

தந்தை சீத்தாராம அய்யர்-தாயார் திரிபுரசுந்தரி
பிண்டதானம்-கயா பல்குனி நதி

அவசர காலத்தை முன்னிட்டு ஒரே நாளில் செய்கின்ற நிலை உருவாகியுள்ளது அதனால் பஞ்சசிராத்தம் பல்குனி, விஷ்ணு பாதம், அஷய வடம் முதலியவற்றில் செய்தோம். நாங்கள் ஆறு நபர்கள் பிராமண சிரார்த்தம் செய்ய இருந்ததால் அவருடைய சிஷ்யரை எங்களுடன் அனுப்பி சிரார்த்த காரியங்களை கவனிக்குமாறு கூறினார். நாங்கள் பல்குனி நதியில் நீராட சென்றோம் அங்கு சென்று பார்த்தபின்பு தான் தெரிந்தது பல்குனி நதியில் நீர் ஒட்டம் இல்லை என்பதும் சிறிய வாய்க்கால் மாதிரி தண்ணீர் இருந்தது அதில் குளிக்க முடியாது என்பதையும் அறிந்தோம். பல இடங்களில் ஊற்று நீரை தேக்கி வைத்திருந்தார்கள். நாங்கள் ஆற்றின் வாய்க்காலிலிருந்து தெளிந்த நீரை ஒரு பித்தளை செம்பு பாத்திரத்தில் பிடித்துக் கொண்டு நீராடியதாக பாவித்து ப்ரோச்சனம் செய்து கொண்டோம்.

பின்னர் பல்குனி நீருடன் ஆற்றின் படி எறி முன்னால் உள்ள மண்டபத்தில் அமர்ந்து சங்கல்பம், தர்ப்பணம் செய்தோம். பின்னர் அருகிலுள்ள மண்டபத்தில் சுந்தரமுர்த்தி ஆகிய நானும் எனது தர்மபத்தினி பத்மாவதியும் மூன்று மண் கலசங்கள் தனித்தனியாக வைத்து கீழே அக்நி தயார் செய்து மண் கலசத்தில் அவிஸ்/பிண்டம் தயாரிக்க அதில் பல்குனி ஆற்று நீரை ஊற்றி, அரிசியிட்டு சாதம் நன்கு வெந்தவுடன் ஒரு கலசத்தை மட்டும் எடுத்து வந்து விஷ்ணு பாதத்தின் முன்புறம் அமைந்துள்ள சிரார்த்தம் செய்வதற்க்காக கட்டப்பட்டுள்ள மண்டபத்தில் அமர்ந்தோம்.

சாஸ்திரிகள் ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியாக தர்ப்பணங்கள் செய்வித்த பின்னர் நாங்கள் தயாரித்து கொண்டு சென்ற அவிசிலிருந்து எனது தர்மபத்தினி பிண்டங்கள் தயாரித்து கொடுக்க நான் எங்கள் தந்தை சீத்தாராம அய்யர்-தாயார் திரிபுரசுந்தரி அவர்களுக்கும் அவர்களது முன்னோர் மூன்று தலைமுறைகளுக்கும் எனது மனைவி பரம்பறையில் மூன்று தலை முறைகளுக்கும் பித்ரு தர்ப்பணம் செய்து பிண்டம் போட்டு அவர்கள் நிம்மதியுடன் சொர்க்கத்தில் வாழ்ந்து எங்கள் தலைமுறையினரை நல்ல தேக ஆரோக்கியத்துடனும் செல்வசெழிப்புடனும் வாழ அவர்கள் ஆசியை கோரி பிரார்த்தனைகள் செய்து பிண்டம் அளித்தோம்.

பிண்ட தர்ப்பணம் செய்து முடித்தவுடன் அவற்றை பல்குனி நதியில் விடவேண்டும் ஆனால் நதியில் நீரில்லாததால் கோவிலில் இருந்த பசு மாட்டிற்கு இந்த பிண்டங்களை அளித்தோம். பசு மாடும் பிண்டம் போட்டவுடன் விரும்பி அனைத்தையும் சாப்பிட்டது எங்கள் பித்ருக்கள் பசு மூலமாக வந்து எங்களை ஆசீர்வதித்ததாக மகிழ்ச்சி அடைந்தோம்.

நாங்கள் முன்னதாகவே வழக்கமாக அமாவாசை தர்ப்பணம் செய்யும் போது மேற்கண்ட முன்னோர்களின் பெயர்களை கூறி தர்ப்பணம் செய்வதால் அனைத்தும் ஞாபகத்தில் இருந்து செய்தோம். பின்னால் மற்ற அனைவருக்கும் தர்ப்பணம் செய்யும்போது பெயர் மறந்து விடாமல் இருக்க எங்கள் உறவினரிடம் கேட்டு மறைந்த முன்னோர்கள் பெயரை கம்ப்யூட்டரில் பதிவு செய்து தண்ணீர் படாமல் இருக்க லேமினாடிட் செய்து கொண்டு போயிருந்தோம். எங்கள் குழுவில் மற்றவர்கள் யாரும் இது போல் கடை பிடிக்காதனால் சிறிது சிரமப்பட்டார்கள்.

கருத்துகள் இல்லை: