Translate

Translate

எனது வலைப்பதிவு பட்டியல்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

திங்கள், 2 நவம்பர், 2009



த்ரிவேணி ஸ்நானம்

கங்கையின் தெளிவான ஜலம் யமுனையின் நீல நிறமுள்ள ஜலத்துடன் சங்கமமாகும் இடம் சங்கம ஸ்தலமாகும். இங்கு ஸரஸ்வதி நதி அந்தர்வாஹினியாக ஓடிக்கொண்டே இருக்கிறாள்.

படகுத்துறையில் ஏராளமான படகுகள் நிற்கின்றன அவற்றில் ஒரு படகை அமர்த்திக்கொண்டு சங்கமத்துறை பயணித்தோம் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குள் கங்கை யமுனை சரஸ்வதி மூன்றும் சங்கமம் ஆகும் இடம் இருக்கிறது. படகுக்கார்கள் சங்கமத்துறை அருகில் நிறுத்தி விடுகிறார்கள் அங்கு ஆழம் அதிகமில்லை.

மூங்கில் கம்புகளில் படகை கட்டி நிறுத்துகின்றனர். மற்ற படகோடு உராய்ந்தபடி நிற்பதால் படகு அதிகம் ஆட்டம் காணாமல் நிலையாக நிற்கிறது. நான்கு மூங்கில்களை நட்டு அதன் நடுவில் பலகையினால் மேடை அமைத்துள்ளனர். கீழே குதிக்க பயப்படுபவர்கள் மற்றும் பெண்கள் அந்த மேடையில் அமர்ந்தவாறு பிளாஸ்டிக் வாளீயினால் தண்ணீரை மொண்டு ஸ்நானம் செய்கிறார்கள். ஸ்நானம் செய்யும் போது சில்லென்றும் கதகதப்பாகவும் இருக்கிறது காரணம் கங்கை நீர் உடலில் படும்போது சில்லென்றும் யமுனை நீர் படும்போது கதகதப்பாகவும் இருப்பது புரிகிறது.

யாத்திரையை தொடங்கும போது முதலில் இராமேஸ்வரம் சென்று சகல கர்மாக்களையும் செய்து அங்குள்ள மணலில் ஒரு பிடி எடுத்த மணல் லிங்கத்தை திரிவேனியில் வேணி மாதவரான லிங்கத்தை கரைத்தோம். மணலை கரைத்துவிட்டு திரிவேணி சங்கமத்தில் ஸ்நானம் செய்தோம்

சங்கமத்தில் நீராடிய பின்னர் நாங்கள் கொண்டு சென்ற பிளாஸ்டிக் கேன்களில் சுத்த கங்கை நீரை கங்கை யமுனை சரஸ்வதி கூடுமிடத்தில் படகில் சென்று பிடித்து நிரப்பிக் கொண்டோம். நம் கையாலேயே நீரை நிரப்பி கொண்டு வந்து சொம்புகளில் விட்டு மூடி போட்டு அடைத்துக் கொண்டு வருவது மிகவும் விசேஷமானது. இராமேஸ்வரத்தில் ஸ்ரீ ராமநாதர் சுவாமிக்கு அபிஷேகத்திற்க்காகவும் உறவினர்களுக்கு கொடுக்கவும் வீட்டில் பூஜை செய்யவும் கங்கை நீரை பிரயகையிலிருந்துதான் எடுத்து செல்ல வேண்டும்.

பூஜைகள் முடிந்து திரும்பும்போது படகில் அமர்ந்து பொரி கடலை வாங்கிப் படகில் அமர்ந்தபடி மீன்களுக்கு உணவிடலாம். மலர் குங்குமம் வளையல் ஆகியவற்றை கங்காதேவிக்கு அர்ப்பணிக்கலாம். அந்த இடத்தில் விளங்கும் தூய்மையும் பக்தி உணர்வும் பக்தர்களின் நெஞ்சில் நிலைபெறுகின்றன.

ஸ்தலப் புரோஹிதர்கள் (பண்டாக்கள்) தங்களின் அடையாளச் சின்ன கொடி அங்கு வைத்துள்ளார்கள். இதனால் யாத்ரீகர்கள் தங்களின் தீர்த்த புரோஹிதர்களை அடையாளம் கண்டுகொள்ள வசதியாய் உள்ளது.

குழந்தை இல்லாதவர்கள் பால் அபிஷேகம் செய்து சங்கல்பம் கூறுகிறார்கள். அங்கேயே பால் விற்கிறார்கள்.

முக்கியமாக வட இந்தியர்கள் திரிவேணீ சங்கம ஸ்தலத்தில் முடி இறக்கிக் கொள்கின்றனர்.

கருத்துகள் இல்லை: